முதலாம் தியோனீசியசு (அண்.கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும்அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...
1727–இங்கிலாந்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
1978– கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.
2016–நாசாஒசைரிசு-ரெக்சு (படம்) என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பியது.
பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும்.
அரச பயங்கரவாதம் எனும் சொல் ஓர் அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம். 1930-களில் இது உருவாக்கப்பட்டது.
அ. மணிகண்டன், தனியார் துறையில் பணிபுரிந்து வரும் இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவர் 2015 முதல் பங்களித்து வருகிறார். தொடக்கத்தில் குறைந்தபட்சம் 100 அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுத முனைந்தார், ஆனால் அவர்தம் முதலிரண்டு கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் கொள்கையோடு பொருந்தவில்லையென நிராகரிக்கப்பட்டன. அதன்பின்பு தெர்மோவெல் என்ற அறிவியல் சார்ந்த கட்டுரையில் எழுதப் பயின்றாலும், எண்ணற்ற தொடருந்து சந்திப்பு நிலையங்கள், எளிய அட்டவணைகளைப் பொருளடக்கமாகக் கொண்ட கட்டுரைகளை எழுதுவதன் மூலம் விக்கியின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளத் துவங்கினார். பின்பு அவரது அன்றாடப் பணிச்சூழ்நிலையில் பயன்படுத்தும் எளிய அறிவியல் பொருட்கள், அவரது பயணத்தில் காணும் பொருட்களை ஆங்கில விக்கிப்பிடியாவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யத் துவங்கினார். இன்றுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் புதிதாகத் துவங்கியதுடன், எண்ணற்ற கட்டுரைகளைப் பிழைதிருத்தம் செய்தும் வருகிறார். விக்கிப்படியாவிற்குக் கலைக்களஞ்சியக் கட்டுரைகளை எழுதுவதன் மூலம் அவர்தம் பணிச்சூழலில் தரவுசார்ந்து எழுதுவதற்கு இந்த அனுபவம் பெரிதும் கைக்கொடுக்கின்றது என்கிறார்.
பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,90,079 கட்டுரைகள் உள்ளன.மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.